
கண்டி-கட்டுகஸ்தோட்டை வீதியில் மோட்டார் சைக்கிள் பந்தயத்தில் ஈடுபட்ட இரண்டு இளைஞர்கள் விபத்தில் சிக்கியதில் ஒருவர் உயிரிழந்துள்ளார். மற்றொருவர் படுகாயமடைந்து பேராதனை போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதாக கட்டுகஸ்தோட்டை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
அக்குரணை பகுதியைச் சேர்ந்த 18 மற்றும் 19 வயதுடைய இரண்டு இளைஞர்கள் கட்டுகஸ்தொடை வீதியில் அதிவேகமாக பந்தயத்தில் ஈடுபட்டிருந்தபோது, கான்கிரீட் பாதுகாப்பு கம்பத்தில் மோதி விபத்து சம்பவித்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இவ் விபத்தில் 18 வயதுடைய அந்த இளைஞர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இப் பிரதேசத்தில் மோட்டார் சைக்கிள்கள் மற்றும் கார்களைப் பயன்படுத்தி இரவு நேர பந்தயங்கள் சிறிது காலமாக நடைபெற்று வருவதாகவும் பலர் கைது செய்யப்பட்டு சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டிருந்தாலும், இத்தகைய பந்தயங்கள் தொடர்வதாகவும் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.





