
ஹைதராபாத் விகாராபாத் மாவட்டம் காமரெட்டிகுடா கிராமத்தில் வசித்து வருபவர் 25 வயது மகேந்தர் ரெட்டி. இவர் தனது 22 வயது கர்ப்பிணி மனைவி சுவாதி யாதவை கொடூரமாகக் கொலை செய்ததாக அதிர்ச்சி தரும் தகவல்கள் வெளியாகியுள்ளன. பக்கத்து வீட்டுக்காரர்களாக இருந்த இருவரும் சிறுவயது முதலே காதலித்து திருமணம் செய்துகொண்டனர்.
25 நாட்களுக்கு முன்பு வேலை வாய்ப்புக்காக ஹைதராபாத் நகரில் குடிபெயர்ந்து உப்பலில் வசித்து வந்தனர்.மனைவியை கொலை செய்த விவகாரத்தில் நடத்தப்பட்ட விசாரணையில் மனைவி சுவாதியை மகேந்தர் ரெட்டி கொலை செய்த பின் உடலை துண்டித்ததை ஒப்பு கொண்டு பரபரப்பு வாக்குமூலம் அளித்துள்ளார்.
அதன்படி கைகள், கால்கள், தலையை பிரித்து, அவற்றை பைகளில் சுற்றி பிரதாப் சிங்காரம் அருகே உள்ள மூசி ஆற்றில் கொட்டியதாக தெரிகிறது மீதமுள்ள உடல் பாகங்களை மீட்க பேரிடர் மீட்புப் படை தடயவியல் குழுக்கள் மூசி ஆற்றங்கரையில் தீவிரமாக தேடுதல் நடத்தி வருகின்றனர்.
கர்ப்பிணி பெண்ணை கொலை செய்து உடலை துண்டுகளாக்கி ஆற்றில் வீசி சென்ற சம்பவம் இந்தியா முழுவதும் பெரும் அதிர்ச்சியையும், பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.





