
கொழும்பு, மத்தேகொட பொலிஸ் பிரிவில் உள்ள வீதியில் இடம்பெற்ற விபத்தில் இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார். கொட்டாவ நோக்கிச் சென்ற மோட்டார் சைக்கிள் எதிரே வந்த பேருந்துடன் மோதி வீதியில் கவிழ்ந்தது.
மோட்டார் சைக்கிளை ஓட்டி வந்த தேவிந்த ருக்ஷன் என்ற 30 வயது இளைஞர் விபத்தில் படுகாயமடைந்து ஹோமாகம மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் உயிரிழந்தார்.

விபத்து தொடர்பாக பேருந்து ஓட்டுநர் கைது செய்யப்பட்டுள்ளார். மேலும் மத்தேகொட பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். சம்பவம் அருகிலுள்ள சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது.





