நல்லூருக்கு காவடி எடுத்த நூற்றுக்கணக்கான படையினர்!!

662

நல்லூர் முருகன் ஆலயத்தில் இன்று காலை படையினர் காவடி எடுத்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. நல்லூரில் இன்று கலை இடம்பெற்ற பூஜை வழிபாடுகளின் போது யாழ். மாவட்ட கட்டளைத் தளபதி மேஜர் ஜெனரல் உதய பெரேரா தலைமையில் நூற்றுக்கணக்கான படையினர் கலந்து கொண்டு காவடி எடுத்துள்ளனர்.

நல்லூர் சங்கிலியன் தோப்பில் இருந்து மங்கள வாத்தியங்களுடன் படையினர் காவடிகள் எடுத்து ஊர்வலமாக நல்லூர் ஆலயத்தை சென்றடைந்தார்கள்.

இதன்போது ஆலயத்தில் இடம்பெற்ற பூசை வழிபாடுகளில் கலந்து கொண்டதுடன் தமது படைப்பிரிவுகளின் கொடிகளை வைத்து ஆசீர்வாதம் பெற்றும் சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.’

11 12 13 14 15