இலங்கை – பாகிஸ்தான் கிரிக்கெட் போட்டி தொடர்பில் ஏற்பட்ட வன்முறையில் 12 மாணவர்கள் காயம்!!

965

Fight

இந்திய சண்டிக்காரில் இலங்கை – பாகிஸ்தான் கிரிக்கெட் போட்டி தொடர்பில் ஏற்பட்ட மோதலின் போது 12 மாணவர்கள் காயமடைந்தனர்.

சுவாமி பரமானந்தா கல்லூரியின் பொறியியல் கல்லூரி மாணவர்கள் மத்தியிலேயே இந்த மோதல் இடம்பெற்றுள்ளது.

கடந்த செவ்வாய்க்கிழமை இரவு இலங்கை- பாகிஸ்தான் கிரிக்கட் போட்டி இடம்பெற்ற வேளையில் பாகிஸ்தானுக்கு ஆதரவாக மாணவர்களில் ஜம்மு காஸ்மீiரை சேர்ந்தவர்கள் கைகளை தட்டி உற்சாகப்படுத்தினர்.

எனினும் அதனை ஏனையவர்கள் ஆட்சேபித்தனர். இதனையடுத்து இரண்டு பிரிவினருக்கும் இடையில் மோதல் இடம்பெற்றது.
வாய்தர்க்கத்தில் தொடங்கிய சண்டை, பின் வன்முறையில் முடிவடைந்துள்ளது. கம்பு, கல் என்பனவற்றால் தாக்குதல்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

இதனையடுத்து பொலிஸார் வந்து நிலைமையை கட்டுப்படுத்தினர். இம் மோதலில் 12 மாணவர்கள் படுகாயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர்.