கனடாவில் மலர்ந்த காதல் : அமெரிக்க பெண்ணை தமிழ் முறைப்படி திருமணம் செய்த இளைஞன்!!

1184

தமிழகத்தைச் சேர்ந்த இளைஞர் ஒருவருக்கும், அமெரிக்காவைச் சேர்ந்த சேர்ந்த இளம்பெண்ணுக்கும் தமிழ் முறைப்படி திருமணம் நடைபெற்றது.

தமிழகத்தின் கோயம்புத்தூரைச் சேர்ந்த இளைஞர் கௌதம். இவர் கனடாவில் படித்து அங்கேயே ஐ.டி நிறுவனம் ஒன்றில் பணிக்கு சேர்ந்தார். இவருடன் கல்லூரியில் ஒன்றாக படித்தவர் அமெரிக்காவின் வாஷிங்டன் டி.சியைச் சேர்ந்த சாரா.

இருவரும் காதலித்து வந்த நிலையில், கல்லூரி பட்டமளிப்பு விழாவில் தங்களது காதல் குறித்து பெற்றோர்களிடம் கூறியுள்ளனர்.

அவர்களும் திருமணத்திற்கு சம்மதம் தெரிவிக்கவே, கௌதம் மற்றும் சாரா இருவரும் கனடாவில் உள்ள மென்பொருள் நிறுவனமொன்றில் பணியாற்றி வந்தனர்.

இந்த நிலையில் சாராவின் பெற்றோர் தமிழ் கலாச்சார முறைப்படி திருமணம் நடைபெற வேண்டும் என்று தங்கள் விருப்பத்தை கூறியுள்ளனர்.

அதனைத் தொடர்ந்து கோயம்புத்தூர் மாவட்ட கொடிசியா வளாகத்தில் காதல் ஜோடி கௌதமிற்கும், சாராவிற்கும் தமிழ் கலாச்சார முறைப்படி திருமணம் நடைபெற்றது.

இதில் அமெரிக்கா மற்றும் கனடாவைச் சேர்ந்த மணமகளின் உறவினர்கள், நண்பர்கள் என பலரும் கலந்துகொண்டு மணமக்களை வாழ்த்தினர்.