பேரூந்து – வேன் மோதி விபத்து : நால்வர் வைத்தியசாலையில் அனுமதி!!

926

அநுராதபுரம் – ரம்பேவ ஏ9 பிரதான வீதியில் பரசன்கஸ்வெவ பகுதியில் இடம்பெற்ற விபத்தில் நால்வர் காயமடைந்துள்ளதாக பரசன்கஸ்வெவ பொலிஸார் தெரிவித்தனர். இந்த விபத்து இன்று வியாழக்கிழமை (04) காலை இடம்பெற்றுள்ளது.

பரசன்கஸ்வெவ பஸ் தரிப்பிடத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த இலங்கை போக்குவரத்துச் சபைக்கு சொந்தமான பஸ் ஒன்றின் பின்புறத்தில் வேன் ஒன்று மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

விபத்தின் போது வேனில் பயணித்த நால்வர் காயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

காயமடைந்தவர்கள் சிகிச்சைக்காக அநுராதபுரம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.

கொழும்பிலிருந்து யாழ்ப்பாணம் நோக்கிப் பயணித்த வேன் ஒன்றே விபத்துக்குள்ளாகியுள்ளது. இது தொடர்பான மேலதிக விசாரணைகளை பரசன்கஸ்வெவ பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.