ஸ்பெயினில் களைகட்டிய தக்காளித் திருவிழா : குஷியில் மக்கள்!!

438

ஸ்பெயினில் ஆண்டுதோறும் நடைபெறும் கலாச்சாரத் திருவிழாவான தக்காளி சண்டை நிகழ்ச்சி நேற்று கோலாகலமாக நடைபெற்றுள்ளது.

ஸ்பெயினின் பியுனோல் (Bunol) நகரில் 1 மணி நேரம் நடந்த டோமேடானிய (Tomatina) என்று அழைக்கப்படும் இந்த நிகழ்ச்சியில் மொத்தம் 22,000 பேர் பங்கேற்றுள்ளனர்.

இந்நிகழ்ச்சிக்காக வரவழைக்கப்பட்டிருந்த சுமார் 125 டன் பழுத்த தக்காளிகளை ஒருவர் மீது ஒருவர் மகிழ்ச்சியுடன் வீசிக்கொண்டுள்ளனர். இதனால் வீதி முழுவதும் தக்காளிக் கூழினால் சிவந்து காணப்பட்டுள்ளது.

இந்த நிகழ்ச்சியில் பங்குபெற்ற வெளிநாட்டுப் பயணிகளிடம் இரண்டாவது ஆண்டாக தலைக்கு பத்து யூரோக்கள் வசூலிக்கப்பட்டுள்ளது.

மேலும் சுற்றுலாப் பயணிகளிடையே மிகுந்த வரவேற்பினை இந்நிகழ்ச்சி பெற்றுள்ளதாக கூறப்படுகிறது.

கடந்த 1945ம் ஆண்டில் தக்காளி விளைந்திருந்த பகுதிகளில் வாழ்ந்து வந்த உள்ளூர்க் குழந்தைகள் உணவுக்காக தக்காளியை வீசியெறிந்து சண்டையிட்டுக் கொண்டதைக் கண்டே இத்தகையதொரு நிகழ்ச்சி தொடங்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

T1 T2 T3 T4 T5