
மூதூர் பெரியபாலம் பகுதியில் இன்று காலை இடம்பெற்ற விபத்தில் மேள வாத்திய கலைஞர் ஒருவர் படுகாயமடைந்து மூதூர் தள வைத்தியசாலையின் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
மோட்டார் சைக்கிள் டிப்பர் வாகனத்துடன் மோதியதில் இவ் விபத்து இடம்பெற்றுள்ளது.
திருகோணமலையிலிருந்து மல்லிகைத்தீவில் நடைபெறவுள் திருமண வீடொன்றுக்கு மோட்டார் சைக்கிளில் பயணித்துக் கொண்டிருந்த போது இந்த விபத்து சம்பவம் இடம்பெற்றுள்ளது.
மோட்டார் சைக்கிளில் பயணித்த திருகோணமலையைச் சேர்ந்த மேள வாத்திய கலைஞர் படுகாயங்களுக்குள்ளாகி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை மூதூர் பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.





