
தரம் 5 புலமை பரிசில் பரீட்சை புள்ளிகளின் அடிப்படையில் வவுனியா – இறம்பைக்குளம் மகளிர் கல்லூரியில் கல்வி பயிலும் அரோனிக்கா ரேச்சல் என்ற மாணவி அகில இலங்கையில் தமிழ் மொழி மூலமான பரீட்சையில் இரண்டாம் இடத்தை பெற்று சாதனை படைத்துள்ளார்.
குறித்த மாணவி 189 புள்ளிகளை பெற்று மாவட்ட ரீதியில் முதலாம் இடத்தையும், வடமாகாண ரீதியில் இரண்டாம் இடத்தையும் பெற்றுள்ளார்.
அந்த பாடசாலையில் கல்வி கற்ற மாணவர்களில் 76 பேர் வெட்டுப் புள்ளிகளுக்கு மேல் பெற்று சித்தியடைந்துள்ளனர்.
புலமைப் பரிசில் பரீட்சையில் தேசிய ரீதியில் வவுனியா தெற்கு வலய மாணவி ஒருவர் இரண்டாம் இடம்பெற்றமை இதுவே முதல்முறை என்பதும் குறிப்பிடத்தக்கது.






