
எல்ல – பிரதான வீதியில் நடந்த பேருந்து விபத்து தொடர்பில் பேருந்தில் மோதிய சொகுசு காரின் சாரதி முக்கிய விடயங்களை வெளிப்படுத்தியுள்ளார்.
விபத்து சம்பவிப்பதற்குசில நிமிடங்களுக்கு முன்பு சொகுசு காரில் பயணித்த ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூன்று சகோதரர்கள் உயிர் தப்பியதாக எல்ல பொலிஸார் தெரிவித்திரு்தனர்.
உயிர் தப்பிய மூன்று சகோதரர்களும் பண்டாரவளை, பூனகல வீதியைச் சேர்ந்த புத்தல நகரில் வியாபாரம் செய்து வரும் எச்.எம். சமிது தேஷன் (22) மற்றும் அவரது 17 மற்றும் 19 வயதுடைய இரண்டு சகோதரர்கள் என கூறப்பட்டது.
தங்கல்லை நகராட்சி மன்ற ஊழியர்கள் குழு ஒன்று நுவரெலியாவில் சுற்றுலா சென்றுவிட்டு தங்கள் குடும்பங்களுடன் திரும்பிக் கொண்டிருந்தபோது,
எல்ல-வெல்லவாய பிரதான வீதியில் எதிர் திசையில் இருந்து வந்த சொகுசு காரில் அவர்கள் பயணித்த பேருந்து மோதியது.
பின்னர் வீதிக்கு அருகிலுள்ள ஒரு தடுப்புச் சுவரில் மோதி 1,000 அடி உயரமுள்ள ஒரு பாறையில் கவிழ்ந்து 15 பேர் உயிரிழந்ததுடன் மற்றும் 18 பேர் காயமடைந்தனர்.
விபத்துக்கு சில நிமிடங்களுக்கு முன்பு ஏற்பட்ட தனது அனுபவங்களை விவரித்த வாமிது தேஷன் (22),

“நான் புத்தலவில் ஒரு தொழிலை நடத்தி அங்கு வேலை செய்கிறேன். நாங்கள் வார இறுதி நாட்கள் என்பதால் பண்டாரவளை பூனகல வீதியில் உள்ள எங்கள் வீட்டிற்குச் சென்றோம்.
குறித்த எல்ல-வெல்லவாய பிரதான வீதியில் நாங்கள் அடிக்கடி பயணிப்பதால், நான் மிகவும் சாலையைப் பற்றி நன்கு அறிந்திருக்கிறேன். மலைச் சரிவுகளில் ஆபத்தான வளைவுகள் உள்ள இடங்கள் எனக்குத் தெரியும்.
அன்று (04.09.2025) நாங்கள் எங்கள் வேலையை முடித்துவிட்டு, இரவில் புத்தலவிலிருந்து என் இரண்டு சகோதரர்களுடன் பண்டாரவைளைக்கு புறப்பட்டோம்.
நான் காரை ஓட்டிக்கொண்டிருந்தேன். என் தம்பி முன் இருக்கையில் இருந்தான். என் இரண்டாவது தம்பி (19) ஜன்னலுக்குப் பக்கத்தில் பின் இருக்கையில் இருந்தான்.
நாங்கள் இராவணன் நீர்வீழ்ச்சியைக் கடந்து எல்ல நோக்கி மலையில் வாகனத்தை செலுத்தியபோது 15வது தூணில் உள்ள ஃபேட்டல் வளைவுக்கு அருகில், எல்ல பக்கத்திலிருந்து வெல்லவாயா நோக்கி ஒரு பேருந்து வந்தது. குறித்த பேருந்து வேகமாக விளக்குகளை எரியவிட்டு வருவதைக் கண்டேன்.
இதன்போது அந்த பேருந்து வேகமாக என்னை நோக்கி வந்தது. அதே நேரத்தில், நான் காரை வீதியின் இடது பக்கமாக முடிந்தவரை நிறுத்தினேன்.
அந்த நேரத்தில், வேகமாக வந்து கொண்டிருந்த பேருந்து என் காரின் வலது பக்கத்தில் மோதி அதிவேகமாகச் சென்றது.
அந்த நேரத்தில், கார் நின்றது. எனக்கு எதுவும் புரியவில்லை. பேருந்து எங்கே சென்றது என்றும் எனக்குப் புரியவில்லை. பேருந்தை நிறுத்தாமல் சாரதி சென்றுவிட்டார்.
இந்த விபத்து நடந்தபோது சரியாக இரவு 9 மணி. பின்னர், நான் என் இரண்டு சகோதரர்களுடன் வாகனத்தில் இருந்து இறங்கி மோதுன்ட இடத்தை அவதானித்தோம்.
வாகனத்தின் வலது பக்கம் சேதமடைந்தது. பின்புறத்தில் வலது ஜன்னலில் அமர்ந்திருந்த என் சகோதரர், மற்றொரு சகோதரர் எந்த ஆபத்தும் இல்லாமல் தப்பினார்.
நான் என் தந்தைக்கு அழைப்பை ஏற்படுத்தி, விளக்கம் அளித்தேன். பின்னர், கீழே உள்ள வளைவின் திசையில் இருந்து யாரோ அலறி அழும் சத்தம் கேட்டது.
இருள் காரணமாக எதையும் பார்க்க முடியவில்லை. இந்த நேரத்தில், ஒரு பேருந்தின் இலக்க தகடும், பேருந்துகளில் பொருத்தப்பட்டிருந்த வெள்ளை இரும்பு கம்பமும் தரையில் விழுந்து கிடப்பதைக் கண்டோம்.

இதன்போது வெல்லவாய பக்கத்திலிருந்து நீர்வீழ்ச்சியை நோக்கி ஒரு இராணுவ வாகனம் வருவதைக் கண்டோம்.
எனவே நாங்கள் அந்த வாகனத்தை நிறுத்தி விளக்கமளித்தோம். பின்னர், அவர்கள் இராணுவ வாகனத்தை நிறுத்தி, அதிலிருந்து ஒரு பெரிய கயிற்றைக் கொண்டு வந்து, தங்களிடம் இருந்த விளக்குகளை பயன்படுத்தி, கயிற்றில் மூலம் இறங்கி, இரண்டு சிறிய குழந்தைகள், இரண்டு பெண்கள் மற்றும் ஒரு ஆணை தூக்கி வந்தனர்.
நாங்கள் மூவரும் அவர்களுக்கு உதவினோம். அந்த நேரத்தில்தான் எங்கள் காரை மோதிய பேருந்து இராவணன் நீர்வீழ்ச்சியில் கவிழ்ந்ததை அறிந்தோம்.
அதே நேரத்தில், எல்ல பொலிஸ் அதிகாரிகள் வந்தனர். வீதி மூடப்படாததால் அவர்கள் இருபுறமும் வீதியை மறித்தனர். நாங்கள் முதலில் மீட்ட ஐந்து பேரும் பதுளை போதனா மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டனர்.
பின்னர், இராணுவ அதிகாரிகள், உள்ளூர்வாசிகள், பொலிஸ் அதிகாரிகள் மற்றும் மருத்துவர்கள் வந்து தங்கள் தொலைபேசி விளக்குகளை பயன்படுத்தி, கயிறுகளின் உதவியுடன் பள்ளத்தாக்கில் இறங்கி, பேருந்தில் இருந்த காயமடைந்தவர்களை கயிறுகளின் உதவியுடன் பள்ளத்தாக்கிலிருந்து மேலே இழுத்து, மருத்துவமனைகளுக்கு அனுப்பினர்.
பின்னர் ஜெனரேட்டர்கள் வரவழைக்கப்பட்டு மின்சாரம் வழங்கப்பட்டது. பள்ளத்தாக்கிலிருந்து உடல்கள் சிரமத்துடன் மீட்கப்பட்டன. காலை, பொலிஸ் அதிகாரிகள் தனது விவரங்களை என்னிடம் கேட்டார்கள்.
பின்னர் காலை 6 மணியளவில், நான் எல்ல பொலிஸ் நிலையத்திற்குச் சென்றேன். எனது வாக்குமூலங்களைப் பெற்ற பிறகு, அவர்கள் என்னை பண்டாரவளை நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தினர். பின்னர் பிணை வழங்கப்பட்டது” என கூறியுள்ளார்.





