வவுனியா பூந்தோட்டம் மகாவித்தியாலய பழைய மாணவர்களின் ஒன்று கூடலும் விளையாட்டு நிகழ்வும்!!

2714

வவுனியா பூந்தோட்டம் மகாவித்தியாலய பழையமாணவர் சங்கத்தின் ஏற்ப்பாட்டில் இடம்பெற்ற ஒன்றுகூடலும், விளையாட்டு நிகழ்வும் லயன்ஸ் விளையாட்டு கழகமைதானத்தில் இடம்பெற்றது.

பாடசாலையின் அதிபரும், சங்கத்தின் பதவி வழித்தலைவருமான கி.நந்தபாலன் தலைமையில் நிகழ்வுகள் இடம்பெற்றது. அகவணக்கத்துடன் ஆரம்பமாகிய இந் நிகழ்வுகளில் முதற்கட்டமாக பழைய மாணவர்களுக்கிடையிலான துடுப்பாட்ட சுற்றுப்போட்டி இடம்பெற்றது.

அணிக்கு 8 பேர் கொண்ட இப்போட்டியின் இறுதிப்போட்டிக்கு 2006 ஆம் வருட க.பொ.த.சாதாரண தர மாணவர்களும், 2017 மாணவர்களும் தகுதிபெற்றனர். போட்டி முடிவில் 2006 ஆண்டு மாணவர்கள் வெற்றிபெற்று கிண்ணத்தை கைப்பற்றியிருந்தனர்.

தொடர்ந்து இடம்பெற்ற பெண்களுக்கான கயிறு
இழுத்தல் போட்டியில் 2005 க.பொ.த.சாதாரண தர மாணவர்கள வெற்றியை தமதாக்கியிருந்தனர்.

வெற்றிபெற்றவர்களுக்கான வெற்றிக்கிண்ணங்கள் விருந்தினர்களால் வழங்கிவைக்கப்பட்டது. நிகழ்வில் முதன்மை அதிதியாக கோட்டக்கல்வி அதிகாரி செல்வரத்தினம், கலந்துகொண்டதுடன் பெருமளவான பழையமாணவர்களும் பங்கெடுத்திருந்தனர்.