
காலியில் வெகுனுகொட பகுதியில் உள்ள ரயில் மார்க்கத்தில் ரயிலுடன் மோதி வேன் ஒன்று விபத்துக்குள்ளாகியுள்ளதாக காலி தலைமையக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இந்த விபத்து நேற்று செவ்வாய்க்கிழமை (09) மாலை இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
விபத்தின் போது வேனில் பயணித்த தந்தையும் மகனும் காயமடைந்துள்ள நிலையில் சிகிச்சைக்காக கராப்பிட்டிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இந்த விபத்து தொடர்பில் காலி தலைமையக பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.





