
அண்மையில் இராவண எல்ல பகுதியில் இடம்பெற்ற விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு வவுனியா மாநகரசபையின் அமர்வில் அஞ்சலி செலுத்தப்பட்டது.

கடந்த 4ஆம்திகதி இரவு எல்ல பகுதியில் இடம்பெற்ற பேருந்து விபத்தில் தங்காலை நகரசபை ஊழியர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினர் உட்பட 15 பேர் பலியாகியிருந்தனர்.

அவர்களின் ஆத்மா சாந்தியடைவதற்காக வவுனியா மாநகரசபையின் இன்றைய அமர்வில் அஞ்சலி செலுத்தப்பட்டது. இதன்போது சபையின் விளக்குகள் அனைத்தும் அணைக்கப்பட்டு மெழுவர்த்தி ஏற்றி அஞ்சலி செலுத்தப்பட்டது.





