வீடொன்றுக்குள் நடந்த பயங்கரம் – தாயும் மகனும் கொடூரமாக படுகொலை!!

506

தென்னிலங்கையில் வீடொன்றில் ஒரே குடும்பத்தை சேர்ந்த தாயும் மகனும் கூரிய ஆயுதத்தால் வெட்டிக் கொலை செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இந்த சம்பவம் கரந்தெனிய, கொட்டவெல பகுதியில் நேற்று இரவு இடம்பெற்றதாக கரந்தெனிய பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

கொட்டவெல பகுதியை சேர்ந்த 75 வயதுடைய ஹகுரு குனவத்தி என்ற பெண்ணும், அவரது 25 வயதுடைய மகன் சதுரங்க திசாநாயக்கவும் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

இரண்டு கொலைகளும் ஒருவரால் செய்யப்பட்டதாகவும், சம்பவம் தொடர்பில் எவரும் கைது செய்யப்படவில்லை எனவும் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

கொலைச் சம்பவம் குறித்து கரந்தெனிய பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.