மைக்ரோசொப்டின் அதிரடி நடவடிக்கை!!

368

Microsoft

மைக்ரோசொப்ட் நிறுவனம் தனது பயனாளர்களுக்கு உதவும் வகையில் சில அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது.

மைக்ரோசொப்ட் நிறுவனமானது தனது இயங்குதளத்தினை பயன்படுத்தும் பயனர்கள் தேவையான மென்பொருட்களை இலகுவாக தரவிறக்கம் செய்யும் வசதியினை Windows Store தளத்தின் மூலம் வழங்கிவருகின்றது.

இத்தளத்தில் காணப்பட்ட சுமார் 1500 வரையான போலி அப்பிளிக்கேஷன்களை மைக்ரோசொப்ட் நிறுவனம் தற்போது அதிரடியாக நீக்கியுள்ளது.

அத்துடன் ஏனைய அப்பிளிக்கேஷன்கள் முறையாகவும், தெளிவாகவும் பெயரிடப்பட்டு சீரான முறையில் ஒழுங்குபடுத்தப்பட்டுள்ளது.

இதனால் பயனர்கள் எந்த சிரமும் இன்றி பாதுகாப்பாக அப்பிளிக்கேஷன்களை தரவிறக்கம் செய்துகொள்ள முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.