வங்கி கணக்குகளில் சிக்கிய பெருந்தொகை பணம் : திடீரென தலைமறைவான பெண்!!

831

போதைப்பொருள் கடத்தல்காரரான பெண் ஒருவருக்கு சொந்தமான ரூ.5.73 மில்லியன் மதிப்புள்ள சொத்துக்கள் முடக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பேச்சாளர் அலுவலகம் தெரிவித்துள்ளது.

இவ்வாறு முடக்கப்பட்ட சொத்துக்களில் வங்கிக் கணக்குகளில் உள்ள பணம், நிலம், நான்கு கடைவீடுகள் மற்றும் மூன்று மாடி வீடு ஆகியவை அடங்கும் என்று அலுவலகம் தெரிவித்துள்ளது.

இந்த கட்டடங்கள் போதைப்பொருள் கடத்தலின் மூலம் கிடைக்கப்பெற்ற பணத்தில் ஈட்டியுள்ளமை விசாரணையில் தெரியவந்துள்ளது.

மேலும், சந்தேகநபரான பெண் தற்போது தலைமறைவாகியுள்ளதாகவும், அவரை உடனடியாக கைது செய்து நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்த பொலிஸ் நிலையங்களுக்கு அறிவிக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸ் ஊடகப்பேச்சாளர் அலுவலகம் தெரிவித்துள்ளது.