சிக்கன் கேட்ட மகனை பூரிக்கட்டையால் அடித்தே கொலை செய்த தாய்!!

515

மகாராஷ்டிராவில் பால்கரில் வசித்து வருபவர் பல்லவி. 40 வயதாகும் இவர் அங்குள்ள அடுக்குமாடி குடியிருப்பில் சின்மயி கணேஷ், 7, என்ற மகன் மற்றும் 10 வயது மகளுடன் வசித்து வந்தார்.

விடுமுறை நாளான நேற்று முன்தினம் வீட்டில் இருந்த பிள்ளைகள் இருவரும், தன் தாயிடம் சிக்கன் உணவு வகைகளை சமைத்து தரும்படி வற்புறுத்தினர்.

ஆத்திரம்அடைந்த பல்லவி, சமையலறையில் இருந்த சப்பாத்தி கட்டையை எடுத்து, பிள்ளைகளை சராமாரியாக தாக்கத் தொடங்கினார். இதில் அவரது மகனும், மகளும் படுகாயங்களுடன் மயங்கி விழுந்தனர்.

பிள்ளைகளின் அலறல் சத்தம் கேட்டு போலீசில் புகார் அளித்தனர். இதன்படி அங்கு வந்த போலீசார், மயங்கி விழுந்த இரு குழந்தைகளையும் மீட்டு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.

அங்கு டாக்டர்கள் பரிசோதித்ததில், சிறுவன் சின்மயி கணேஷ் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக தெரிவித்தனர்.

படுகாயங்களுடன் மீட்கப்பட்ட சிறுமிக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதைத் தொடர்ந்து, சிறுவனின் உயிரிழப்புக்கு காரணமான அவரது தாய் பல்லவியை, போலீசார் கைது செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.