கிளிநொச்சியில் ஆசிரியர் எடுத்த விபரீத முடிவு!!

668

கிளிநொச்சி பெரிய பரந்தன் பகுதியில் அமைந்துள்ள ஆசிரியர் விடுதியில் இருந்து ஆசிரியர் ஒருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

திருவையாறு மகா வித்தியாலயத்தில் கல்வி கற்பிக்கும் 47 வயதுடைய ஆசிரியரே எரி காயங்களுடன் சடலமாக இனம் காணப்பட்டுள்ளார்.

ஆசிரியர் , ஆசிரியர் விடுதியில் தீயிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளதாக பொலிஸா கூறியுள்ளனர் .

இச் சம்பவம் அங்கு பரப்ரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில் சம்பவம் தொடர்பாக கிளிநொச்சி பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.