6 வயது மகளை அடித்தே கொன்ற 6 வயது மகளை அடித்தே கொன்ற தாய்!!

697

Murder

வெல்லம்பிட்டிய பகுதியில் தாயின் தாக்குதலுக்கு இலக்காகி ஆறு வயது சிறுமி ஒருவர் உயிரிழந்துள்ளார். சம்பவத்தில் நாகஹமுல்லை வீதி – கொலன்னாவை பகுதியைச் சேர்ந்த பாத்திமா ஷபீயா என்ற சிறுமியே பலியாகியுள்ளதாக தெரியவந்துள்ளது.

தங்கையின் கழுத்தை நெறித்து, தனது தாய் அவரைத் தாக்கியதாக சிறுமியின் 7 வயது சகோதரி குறிப்பிட்டுள்ளார். தாயின் தாக்குதலுக்கு இலக்கான குறித்த சிறுமி நேற்று காலை கொழும்பு ரிஜ்வே சிறுவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார்.

எனினும் அங்கு சிகிச்சை பலனின்றி அவர் பலியாகியுள்ளார். சம்பவத்துடன் தொடர்புடைய 29 வயதான தாய் கைதாகியுள்ளார்.
பிரேதப் பரிசோதனைகள் இன்றும் இடம்பெறும் என பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

இதேவேளை அண்மையில் பேருவளை பகுதியில் தந்தையின் தாக்குதலுக்கு இலக்காகி ஒன்றரை வயது சிறுமி ஒருவர் பலியானமை குறிப்பிடத்தக்கது.