“சாவுக்கு பயந்தவனுக்கு தினம் தினம் சாவு” : அஜித் ரசிகர்களின் சுவரொட்டியால் பரபரப்பு!!

639

Ajith

தமிழ் சினிமாவின் முன்னணி நாயகன் அஜித்.தல என்று ரசிகர்களால் அழைக்கப்படும் இவரது வீட்டில் வெடிகுண்டு வைத்துள்ளதாக மர்ம ஆசாமி மிரட்டல் விடுத்தான்.

இதனையடுத்து சென்னை பொலிசார் திருவான்மியூரில் உள்ள அவரது வீட்டில் சுமார் 1½ மணி நேரம் சோதனை நடத்தியதில் வெடிகுண்டு இல்லை என்பது தெரியவந்தது. இதுதொடர்பாக திருவான்மியூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து வெடிகுண்டு மிரட்டல் விடுத்த மர்ம ஆசாமியை தேடி வருகின்றனர்.

இந்நிலையில் அஜீத் வீட்டுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்தவரை கைது செய்யக்கோரி மதுரையில் அவரது ரசிகர்கள் கண்டன சுவரொட்டியை ஓட்டியுள்ளனர்.சுவரொட்டியில் ‘‘வெடி குண்டு மிரட்டல் விடுத்த கோழைகளை கைது செய்! சாவுக்கு பயந்தவனுக்கு தினம் தினம் சாவு, எதுக்குமே பயப்படாதவனுக்கு ஒரு தடவை தான் சாவு, எங்க தலயை தொடணும்னா… எங்களை தாண்டி தொட்டுப்பாருங்கடா பார்ப்போம்’’ என்று குறிப்பிடப்பட்டுள்ளது.