அமிதாப்பச்சனுக்கு திடீர் உடல் நலக்குறைவு : படப்பிடிப்பு ரத்து!!

560

Amirthap

பிரபல இந்தி நடிகர் அமிதாப்பச்சன், பிகு என்ற படத்தில் நடித்து வருகிறார். இதில், நடிகை தீபிகா படுகோனே, நடிகர் இர்பான் கான் ஆகியோரும் நடிக்கிறார்கள்.

இந்நிலையில், நேற்று படப்பிடிப்பு தளத்தில் இருந்தபோது நடிகர் அமிதாப்பச்சனுக்கு திடீரென வைரஸ் காய்ச்சல் ஏற்பட்டது. இதனால் அவர் உடல்நலம் குன்றி காணப்பட்டார். உடனடியாக அவரை மும்பையில் உள்ள ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர். இதனால் படப்பிடிப்பு பாதியில் நிறுத்தப்பட்டது.

இந்நிலையில், தனது உடல்நலம் குறித்து டுவிட்டர் வலைதளத்தில் கருத்து தெரிவித்த அமிதாப்பச்சன், ‘அட, காய்ச்சல் ஏற்பட்டு சரிந்துவிட்டேன்’ என்று குறிப்பிட்டு உள்ளார். மேலும், தான் மீண்டுவர வேண்டும் என்று தனக்காக பிரார்த்தனை செய்யும் அனைத்து ரசிகர்களுக்கும் அவர் நன்றியையும் தெரிவித்து கொண்டார்.