தொழிலதிபரை மணப்பதாக வதந்தி : குமுறும் அசின்!!

776

Asin

தமிழ் தெலுங்கு திரையுலகில் முன்னணி நடிகையாக இருந்த அசின் கஜினி படம் மூலம் இந்திக்கு போனார். அப்படம் ஹிட்டானதால் அங்கு படவாய்ப்புகள் குவிந்தன. அமீர்கான், சல்மான்கான், அக்ஷய்குமார், அபிஷேக் பச்சன் போன்ற பெரிய ஹீரோக்கள் ஜோடியாக நடித்தார். தொடர்ந்து இந்திப் படங்களில் நடித்து வருகிறார்.

தமிழில் கடைசியாக விஜய் ஜோடியாக காவலன் படத்தில் நடித்தார். மீண்டும் தமிழ் படத்தில் நடிக்க கதை கேட்பதாக தகவல் வெளியாகி உள்ளது. இந்த நிலையில் அசினுக்கும் மும்பை தொழில் அதிபர் ஒருவருக்கும் காதல் மலர்ந்துள்ளதாகவும் விரைவில் இவர்கள் திருமணம் நடக்கும் என்றும் செய்தி பரவி இருக்கிறது. இதுபற்றி அசினிடம் கேட்டபோது மறுத்தார். அவர் கூறியதாவது..

நான் சினிமாவில் பிசியாக நடித்துக் கொண்டு இருக்கிறேன். காதலிப்பதற்கு எனக்கு நேரம் இல்லை. தொழிலதிபரை விரும்புவதாகவும் அவரை திருமணம் செய்யப் போகிறேன் என்றும் வெளியான செய்திகளில் உண்மை இல்லை. எனக்கு தற்போது 26 வயதுதான் ஆகிறது. இன்னும் ஐந்து வருடங்களுக்கு திருமணம் பற்றி சிந்திக்க மாட்டேன். தென்னிந்திய மொழி படங்களில் நடிப்பது பற்றி பேசி வருகிறேன். ரசிகர்களுக்கு விரைவில் நல்ல தகவல் வரும் என்று தெரிவித்தார்.