சீரற்ற வானிலை : முச்சக்கரவண்டி மீது மரமொன்று முறிந்து விழுந்தது!!

366

காலி, அக்குரஸ்ஸ, ஹங்எல பிரதேசத்தில் பயணித்துக்கொண்டிருந்த முச்சக்கரவண்டி ஒன்றின் மீது மரம் ஒன்று முறிந்து விழுந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இந்த விபத்து நேற்று வியாழக்கிழமை (23.10.2025) காலை இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். எவ்வாறிருப்பினும் இந்த விபத்தின் போது எந்தவித உயிர் சேதங்களும் ஏற்படவில்லை என பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.

நாட்டில் நிலவும் சீரற்ற வானிலை காரணமாக சில பகுதிகளில் மரங்கள் முறிந்து விழுவதால் சாரதிகள் மற்றும் பொதுமக்கள் மிகவும் கவனமாக இருக்குமாறு பொலிஸார் கேட்டுக்கொண்டுள்ளனர்.