உழவு இயந்திரத்தால் பிரிந்த உயிர் : தீவிரமாகும் விசாரணைகள்!!

849

களுத்துறையில் தொடங்கொட பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மலபட – புஹபுகொட வீதியின் மலபட சந்தியில் இடம்பெற்ற வாகன விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதாக தொடங்கொட பொலிஸார் தெரிவித்தள்ளனர். இந்த விபத்து நேற்று (24.10.2025) இடம்பெற்றுள்ளது.

புஹபுகொட நோக்கிப் பயணித்த உழவு இயந்திரம் ஒன்று எதிர் திசையில் பயணித்த மோட்டார் சைக்கிள் மீது மோதியதில் இந்த விபத்து நேர்ந்துள்ளது.

விபத்தில் மோட்டார் சைக்கிள் செலுத்துனர் மற்றும் பின்புறத்தில் இருந்த இரண்டு பயணிகள் படுகாயமடைந்து நாகொடை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் மோட்டார் சைக்கிளில் பயணித்த ஒருவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

உயிரிழந்தவரின் சடலம் நாகொட வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதோடு, தொடங்கொட பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.