வவுனியாவில் நாளை காலை 6 மணிமுதல் மாலை 7 மணிவரை மின்வெட்டு!!

1219

வடக்கிலுள்ள நான்கு மாவட்டங்களில் நாளை ஞாற்றுக்கிழமை (26.10.2025) மின்தடைப்படும் என இலங்கை மின்சாரசபை அறிவித்துள்ளது.

வவுனியா, மன்னார் 220kV மின் பரிமாற்ற வடத்தினை மாற்றியமைப்பதற்கான (Re-conductoring) வேலைகளிற்காக வடமாகாணத்திற்கான 132kV வவுனியா புதிய அநுராதபுர மின் பரிமாற்ற கட்டமைப்பானது எதிர்வரும் ஜப்பசி மாதம் 26ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை ‘காலை 6.00 மணி முதல் மாலை 07.00 மணி வரை துண்டிக்கப்படுவதால்,

யாழ்ப்பாண மாவட்டம், கிளிநொச்சி மாவட்டம் , முல்லைத்தீவு மாவட்டம் மற்றும் வவுனியா மாவட்டம் முழுவதும் மின் விநியோகமானது துண்டிக்கப்படவுள்ளது.

மேலும் வேலைகள் பூர்த்தியாகியவுடன் மின் இணைப்பானது உடனடியாக மீள வழங்கப்படும் என இலங்கை மின்சாரசபை அறிவித்துள்ளது.