
மகா ஓயா, அரந்தலாவ பகுதியில் பஸ் ஒன்று விபத்துக்குள்ளாகியுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். இந்த விபத்து நேந்று ஞாயிற்றுக்கிழமை (26) இடம்பெற்றுள்ளது.
பஸ் ஒன்று வீதிய விட்டு விலகி குடைசாய்ந்ததில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
விபத்தின் போது பஸ்ஸில் 34 பேர் பயணித்துள்ள நிலையில் எந்தவித உயிர் சேதங்களும் ஏற்படவில்லை என பொலிஸார் தெரிவித்தனர்.
இந்த விபத்து தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.





