
வவுனியா – கனகராயன்குளம் குறிசுட்டகுளம் பகுதியில் தோட்ட காணி ஒன்றுக்கு போடப்பட்டிருந்த யானை வேலியில் பாய்ந்த மின்சாரம் தாக்கியதில் யானை ஒன்று பலியாகி உள்ளது.
இன்று (27.10.2025) காலை தோட்டத்திற்குச் சென்ற விவசாயி யானை ஒன்று இறந்து கிடந்ததை அவதானித்துள்ளார்.
அதனை அடுத்து அயலவர்களுக்கும் கனகராயன்குளம் பொலிஸாருக்கும் தகவலை வழங்கியதை அடுத்து சம்பவ இடத்துக்கு சென்ற பொலிஸார் பார்வையிட்ட போது யானை இறந்த நிலையில் காணப்பட்டுள்ளது.
இவ்விடயம் தொடர்பில் வன ஜீவராசிகள் திணைக்களத்தற்கு அறிவிக்கப்பட்டுள்ளதுடன், கனகராயன்குளம் பொலிஸார் மற்றும் வனஜீவராசிகள் திணைக்களத்தின் இது தொடர்பில் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.





