திருமண நாளில் சீஸ் கேக் சாப்பிட்டதால் விவாகரத்து : 25 வருட உறவை முடித்த மனைவி!!

410

அமெரிக்காவில் நடந்த வினோதச் சம்பவம் ஒன்று இணையத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருமண நாளில் வாங்கிய சீஸ் கேக்கை கணவர் தனியாக சாப்பிட்டதால், மனைவி 25 வருட திருமண வாழ்க்கையை முடித்துள்ளார்.

லாஸ் ஏஞ்சல்ஸ் நகரைச் சேர்ந்த பெண் ஒருவர் தனது அனுபவத்தை ரெட்டிட் சமூக ஊடகத்தில் பதிவிட்டுள்ளார். திருமண ஆண்டு தினத்தில் இருவரும் சேர்ந்து கொண்டாட திட்டமிட்டிருந்தனர்.

அதற்காக பெண் ஒருவர் மிகப் பிரத்தியேகமாக சீஸ் கேக் வாங்கியிருந்தார். ஆனால், அவர் சிறிது நேரம் வெளியே சென்ற போது கணவர் அந்த கேக்கை முழுவதுமாக சாப்பிட்டு விட்டார்.

இதனால் கடும் அதிருப்தியடைந்த மனைவி, “25 ஆண்டுகளாக நான் எவ்வளவோ பொறுமையாகவும், பொருத்தமாகவும் வாழ்ந்து வந்தேன்.

ஆனால், என் உணர்வுகளையும் விருப்பங்களையும் புரிந்து கொள்ளாத ஒருவருடன் இனிமேலும் சேர்ந்து வாழ்வது பயனற்றது” என்று பதிவிட்டுள்ளார்.

இந்த சம்பவம் குறித்து பலரும் அதிர்ச்சியும் நகைச்சுவையுமாக கருத்து தெரிவித்து வருகின்றனர்.

சிலர், “ஒரு கேக்குக்காக 25 வருட திருமணத்தை முடிப்பது மிகைப்படுத்தல்” என விமர்சித்துள்ள நிலையில், மற்ற சிலர் “இது சிறிய விஷயமல்ல, அக்கறை இல்லாமையின் வெளிப்பாடு” என மனைவிக்கு ஆதரவாக கருத்து தெரிவித்துள்ளார்.