வவுனியா வைத்தியசாலைக்கான இணைத்தளத்தை ஆரம்பித்து வைத்த வடமாகாண சுகாதார அமைச்சர்!!

864

Vavuniya Hospital

வவுனியா பொது வைத்தியசாலையின் உத்தியோகபூர்வ இணையத்தை வடமாகாண சுகாதார அமைச்சர் நேற்று (01.09) ஆரம்பித்து வைத்தார்.

வவுனியா பொது வைத்தியசாலை தொடர்பான சகல தகவல்களையும் பெற்றுக் கொள்ளும் வகையிலும் சிகிச்சை பெறுவர்களுக்க உதவியாகவும், சிகிச்சை பெறும் விடயம் தொடர்பாக அறிந்து கொள்ளத்தக்க வகையில் இவ் இணையத்தளம் செயற்படவுள்ளதாக வவுனியா வைத்தியசாலைப் பணிப்பாளர் வைத்திய கலாநிதி கு.அகிலேந்திரன் தெரிவித்தார்.

இவ் உத்தியோக பூர்வ இணையத்தளமானது வடமாகாண சுகாதார அமைச்சின் வவுனியா அலுவலகத்தில் வைத்து சுகாதார அமைச்சர் ப.சத்தியலிங்கம் அவர்களால் ஆரம்பித்து வைக்கப்பட்டது. இவ் ஆரம்ப நிகழ்வில் வைத்தியசாலை பணிப்பாளர் கு.அகிலேந்திரன், வைத்திய கலாநிதி எஸ்.சுதாகரன், சுகாதார அமைச்சரின் பிரத்தியேக செயலாளர் ப.சத்தியசீலன் ஆகியோரும் கலந்து கொண்டனர்.