ரயிலுடன் மோதி முச்சக்கரவண்டி விபத்து : ஒருவர் பலி : இருவர் படுகாயம்!!

491

கம்பஹாவில் வல்பொல ரயில் நிலையத்துக்கு அருகில் உள்ள ரயில் பாதையில் இடம்பெற்ற விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் இரண்டு பெண்கள் படுகாயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இந்த விபத்து இன்று திங்கட்கிழமை (03) காலை இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். கவனக்குறைவாக செலுத்தப்பட்ட முச்சக்கரவண்டி ஒன்று மட்டக்களப்பிலிருந்து கொழும்பு கோட்டை நோக்கிப் பயணித்த ரயிலுடன் மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

விபத்தின் போது முச்சக்கரவண்டியின் சாரதி சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளதுடன் பின்புறத்தில் அமர்ந்திருந்த இரண்டு பெண்கள் படுகாயமடைந்து சிகிச்சைக்காக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.

இந்த விபத்து தொடர்பில் பொலிஸார் விசாரணைகைள மேற்கொண்டு வருகின்றனர்.