வவுனியா பொடியன் கைது தொடர்பாக இணையத்தளங்களில் தவறான நபரின் புகைப்படம் வெளியீடு!!

372

FB1

நேற்று (01.09) அனைத்து இணையத்தளங்களிலும் பரபரப்புச் செய்தியாக வவுனியாவில் சர்ச்சைக்குரிய வவுனியா பொடியன் கைது எனும் செய்தி வெளியிடப்பட்டிருந்தது.

பெரும்பாலான இணையத்தளங்கள் வவுனியா பொடியன் எனக் குறிப்பிட்டு மேலே கொடுக்கப்பட்டுள்ள புகைப்படத்தை பிரசுரித்திருந்தன. இச் செய்தி முகப்புத்தகத்திலும் ஆயிரக் கணக்கானோரால் பகிரப்பட்டிருந்தது.

மேலே புகைப்படத்திலுள்ள இருவருக்கும் வவுனியா பொடியனுக்கும் எந்தவித சம்பந்தமும் கிடையாது. தவறுதலாக இணையத்தளங்கள் இவர்களின் புகைப்படத்தை வெளியிட்டிருந்தன.

இச் சம்பவம் தொடர்பாக புகைப்படதிலுள்ள இருவரும் வவுனியா நெற்றைத் தொடர்புகொண்டு தெரிவித்தபோது,

எமக்கும் வவுனியா பொடியன் என்ற நபருக்கும் எந்தவித சம்பந்தமும் கிடையாது. எமது புகைப்படம் இணையத்தளங்களில் வெளியானதைக் கண்டு அதிர்ச்சியடைந்தோம். தொடர்ந்து உறவினர்களும் நண்பர்களும் எம்மைத் தொடர்புகொண்டு வினவிவருகின்றனர். இதனால் நாம் பெரும் மனஉளைச்சலுக்கு ஆளாகியுள்ளோம்.

இது சம்பந்தமாக எம்மால் வவுனியா பொலிஸ் நிலையத்திலும் முறைப்பாடு ஒன்று பதிவு செய்யப்பட்டுள்ளது. இன் நிலையில் பெரும்பாலான இணையத்தளங்கள் தமது தவறை உணர்ந்து எமது புகைப்படத்தை நீக்கியுள்ளன. சில இணையத்தளங்கள் இன்னும் எமது புகைப்படத்தை நீக்காதுள்ளன.

எனவே எந்த சம்பந்தமும் இல்லாத எமது புகைப்படத்தை நீக்க வேண்டும் எனக் கேட்டுக்கொள்கின்றோம் எனத் தெரிவித்தனர்.