என் சாதனைகள் சிறப்பானது , யாராலும் முறியடிக்க முடியாது : உசேன் போல்ட்!!

611

Usain bolt

பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக உலகின் அதிவேக ஓட்டப்பந்தய வீரர் உசேன் போல்ட் (ஜமேக்கா) முதல் முறையாக இந்தியா சென்றுள்ளார். பெங்களூரில் உள்ள சின்னசாமி ஸ்டேடியத்தில் நேற்று நடந்த கண்காட்சி கிரிக்கெட் போட்டியில் விளையாடினார்.

100 மீட்டர் ஓட்டத்தில் 9.58 வினாடியில் பந்தய தூரத்தை கடந்தும், 200 மீட்டர் ஓட்டத்தில் 19.19 வினாடியில் பந்தய தூரத்தை கடந்தும் உலக சாதனைக்கு சொந்தக்காரராக விளங்கி வருகிறார்.

உங்களது உலக சாதனைகளை யாராவது தகர்க்க முடியுமா என்று கேட்டதற்கு ஒலிம்பிக் சாம்பியன் உசேன் போல்ட் பதில் அளிக்கையில்,

‘எனது 100 மீட்டர் ஓட்ட சாதனையை முறியடிப்பது என்பது முடியாத காரியம். தடகள வீரர் என்ற முறையில் சாதனைகள் படைக்கப்படுவதையும், அவை தகர்க்கப்படுவதையும் நான் பார்த்து இருக்கிறேன். ஆனால் என்னுடைய சாதனைகள் சிறப்பானதாகும்.

இதனை தகர்ப்பது என்பது ரொம்ப கடினம். அதற்காக கடுமையாக உழைக்க வேண்டியது இருக்கும். தற்போது என்னுடன் போட்டியிடும் வீரர்கள் யாராலும் எனது சாதனையை தகர்க்க முடியாது. என்னை யாரும் தோற்கடிக்க விடமாட்டேன்’ என்று கூறினார்.