நீர்கொழும்பு ஜுவல் லங்கா நகை மாளிகைக் கொள்ளை : குற்றவாளி மலேசியாவில் கைது!!

549

A6

நீர்கொழும்பில் உள்ள ஜுவல் லங்கா நகை மாளிகைக் கொள்ளைச் சம்பவத்தின் பிரதான சூத்திரதாரியான எபள் ருவன் மலேசியாவில் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது.

இக் கொள்ளைச் சம்பவம் தொடர்பில் தற்போது சிறையில் இருக்கும், ஐ.தே.க.மாகாணசபை உறுப்பினருடன் இணைந்தே இவர் கடந்த ஏப்ரல் 17ஆம் திகதி இந்தக் கொள்ளைச் சம்பவத்தில் ஈடுபட்டிருந்தார். பின்னர் எபள் ருவன் மலேசியாவிற்கு தப்பிச் சென்றுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டனர்.