நம்பினால் நம்புங்கள்!!

1134

Nambungal

* இரையைத் துரத்தும் சிறுத்தை, தரையில் கால் படாது காற்றில் இருக்கும் நிலையிலேயே, தன் திசையை மாற்றிக்கொள்ளும் திறமை படைத்தது.

* சில ராணித்தேனீக்கள் வயதானவர்களைப் போல பிதற்றிக்கொண்டே இருக்கும்.

* ஒரே இரவில் வௌவால் 3 ஆயிரம் பூச்சிகளைக்கூட தின்னும்.

* இங்கிலாந்திலுள்ள ஒரு நூலகத்தில் 288 ஆண்டுகள் கழித்து, அபராதம் செலுத்தி, ஒரு புத்தகம் திருப்பியளிக்கப்பட்டது. இது கின்னஸ் சாதனையாகவும் பதிவானது.

* பிரமிட் போன்ற வடிவத்தில் கூட, ஜப்பானில் தர்ப்பூசணி பழங்கள் விளைவிக்கப்படுகின்றன.

* தாய்லாந்து தலைநகர் பாங்கொக்கின் அதிகாரபூர்வமான பெயரை ஆங்கிலத்தில் எழுதினால் 167 எழுத்துகள் வரும்.

* நியூயோர்க் நகரத்திலுள்ள எம்பயர் ஸ்டேட் பில்டிங் கட்டுமானத்தில் 1 கோடி செங்கற்கள் பயன்படுத்தப்பட்டுள்ளன.

* செவ்வாய்க் கிரகத்திலுள்ள மிகப்பெரிய எரிமலை 27 கிலோமீட்டர் உயரமானது. 84 ஈஃபிள் கோபுரங்களை ஒன்றன் மீது ஒன்றென அடுக்கி வைத்தது போல அத்தனை உயரம்!

* பீ நட் பட்டர் என்ற சாண்ட்விச் வெண்ணெயை வைரமாக மாற்றி விட முடியும் – வேதிச்சமன்பாட்டின் அடிப்படையில்.

தொடர்ந்து வரும்..