* பறவைகள் விழுங்கும் மிகச்சிறிய நத்தைகளில் 15 சதவீதம், பறவைகளின் வயிற்றுக்குள்ளே வசதியாகத் தங்கி, உயிரோடு உலகையே சுற்றி வரும்!
* பூமியில் ஒவ்வொரு நிமிடமும் 6 ஆயிரம் முறை மின்னல்கள் தோன்றுகின்றன.
* 2 மணி நேர மோட்டார் சைக்கிள் பயணத்தில் 500 கலோரிகள் செலவாகிறது.
* சூரிய மண்டலம் தோன்றுவதற்கு முன்பே உருவான வைரம், இப்போது ஒரு விண்கல்லில் கண்டெடுக்கப்பட்டுள்ளது.
* விஞ்ஞானிகள் புதிதாக அறிமுகப்படுத்தியிருக்கும் ஃபிங்கர்பிரின்டிங் தொழில்நுட்பத்தின் மூலம், கைரேகை பதிவைக் கொண்டே போதை மருந்து உட்கொண்டிருத்தல், வெடிகுண்டு பயன்படுத்துதல், இதய நோய், அனீமியா ஆகிய விஷயங்களைக் கண்டறிய முடியும்.
* நம் காதுகளில் உள்ள குறும்பியும், தாடையின் அசைவும் சேர்ந்து, காதுகளில் சேரும் தூசு, அழுக்கு போன்றவற்றை நீக்கி விடுகின்றன.
* 2050ம் ஆண்டில், நமது மூளையில் நிறைந்திருக்கும் அத்தனை தகவல்களையும் கணனிகளில் பதிவு செய்துவிட முடியும் எனக் கணித்திருக்கின்றனர் விஞ்ஞானிகள்.
* யுரேனஸ் சூரியனை ஒருமுறை சுற்றி வர 84.01 ஆண்டுகள் ஆகும்.
* நிலப்பரப்பின் அடிப்படையில் கணக்கிட்டால், நெதர்லாந்தையே மிக அதிக சூறாவளிகள் தாக்குகின்றன. ஒவ்வொரு 1991 சதுர கிலோமீட்டர் நிலப்பரப்பையும் ஒரு சூறாவளி தாக்குகிறது. அமெரிக்காவில் 8187 சதுர கிலோமீட்டருக்கு ஒரு சூறாவளி.
* மனித உடலில் உள்ள ரத்த நாளங்களின் மொத்த நீளம் ஒரு லட்சம் கிலோமீட்டர்.
தொடர்ந்து வரும்..