நம்பினால் நம்புங்கள்!!

1189

Nambungal

* அமெரிக்க ராணுவத்தில் 2020ம் ஆண்டுக்குள் மொத்த வீரர்களில் 30% வரை ரோபோக்களைப் பயன்படுத்தத் திட்டமிடப்பட்டுள்ளது. சமீபத்தில் ஆப்கானிஸ்தான் போரில் கூட ரோபோக்கள் களமிறக்கப்பட்டன.

* வரைபட ஓவியர்கள் தங்கள் வரைபடங்களை பிறர் பிரதி செய்து பயன்படுத்துவதை அறிவதற்காக, வேண்டுமென்றே சில தவறுகளைச் செய்வது வழக்கம். உதாரணமாக, கற்பனையாக சில சாலைகள்..

* கிளியின் அறிவு 5 வயது குழந்தைக்கு ஒப்பானது.

* 5 மணி நேரத்தில் 150 கப் கோப்பி குடித்தால் மரணம் ஏற்படும் அபாயம் உண்டு.

* காகங்கள் தங்களை தொந்தரவு செய்யும் மனித முகங்களை நினைவு வைத்துக் கொள்ளும்.

* மேன்டிஸ் பூச்சியினால் அதன் தலையை அனைத்துப் பக்கங்களிலும் திருப்ப முடியும் – எந்திரன் சிட்டி போல.

* உலக மக்கள் தொகையில் 10% பேர் இடக்கை பழக்கம் உடையவர்கள்.

* காண்டாமிருகத்தின் பால் இளஞ்சிவப்பு நிறத்தில் இருக்கும்.

தொடர்ந்து வரும்..