தலைகீழாக பிறந்த மனிதன் உணர்ச்சிமயமான பேச்சாளராகவும் கணக்காளராகவும் மாறி சாதனை!!

418


Saathanai

தலை முது­குப்­பு­ற­மாக தலை­கீ­ழாக தோற்­ற­ம­ளிக்கும் நிலையில் பிறந்த நப­ரொ­ருவர் வாழும் அதி­சயம் பிரே­சிலில் இடம்­பெற்­றுள்­ளது.



மொன்ட் சன்தோ பிராந்­தி­யத்தைச் சேர்ந்த கிளோ­டியோ விய­யிரா டி ஒலி­வெ­யிரா (37) என்ற நபரே இவ்­வாறு விநோத பாதிப்­புடன் வாழ்ந்து வரு­கிறார்.

அவர் பிறந்த போது அவர் தொடர்ந்து உயிர்­பி­ழைத்­தி­ருப்­பது சாத்­தி­ய­மற்­றது என தெரி­வித்த மருத்­து­வர்கள், அவரை பட்­டி­னியால் வாட­விட்டு மர­ண­ம­டைய விடு­மாறு அவ­ரது தாயா­ருக்கு பரிந்­துரை செய்­துள்­ளனர்.ஆனால் அவ­ரது தாயாரோ அதற்கு மறுத்துள்ளார்.



அவ­ய­வங்கள் மோச­மாக விகா­ர­ம­டைந்து தலை கீழான நிலையில் இருக்க பிறந்த போதும், கிளோ­டியோ மருத்­து­வர்­களின் ஊகத்தை பொய்­யாக்கும் வகையில் கணக்­கி­ய­லா­ள­ரா­கவும் சர்­வ­தேச ஊக்­க­ம­ளிக்கும் பேச்­சா­ள­ரா­கவும் மாறினார்.



இது தொடர்பில் கிளோ­டியோ கூறு­கையில், ”நான் சிறு­வ­னாக இருந்­தது முதற் ­கொண்டு எப்­போதும் வேலையில் சுறு­சு­றுப்­பாக ஈடு­ப­டு­வதை வழக்­க­மாகக் கொண்­டுள்ளேன். நான் மற்­ற­வர்­க­ளிடம் முழு­மை­யாக தங்­கி­யி­ருப்­பதை விரும்­ப­வில்லை. தற்­போது கணக்­கா­ள­ரா­க­வுள்ள நான் வாடிக்­கை­யா­ளர்­க­ளுக்­கான ஆய்வை மேற்­கொண்டு வரு­வ­துடன் ஆலோ­ச­னை­க­ளையும் வழங்கி வரு­கிறேன் ” என்று கூறினார்.


தொலைக்­காட்­சியை இயக்­குதல், கைய­டக்­கத்­தொ­லை­பே­சியை எடுத்தல், வானொலி பெட்­டியை இயக்­குதல், எனது கணி­னியில் இணை­யத்­த­ளங்­களை பயன்­ப­டுத்தல் உள்­ள­டங்­க­லான அனைத்து கரு­மங்­க­ளையும் நானே செய்­கிறேன்.” என அவர் தெரிவித்தார்.

கிளோ­டியோ தனது வாயில் பேனை­யொன்றை வைத்து எழுத்­து­களை அச்­சி­டு­கிறார். அத்­துடன் கையடக்கத் தொலை பேசிகளையும் கணினியையும் தனது உதடுகள் மூலம் செயற்படுத்துகிறார்.
அவர் பியரா டி சான்தானா பல்கலைக் கழகத்தில் கணக்கியல் துறையில் பட்டப் படிப்பை பூர்த்திசெய்துள்ளார்.


m m1 m3 m4