மீண்டும் ஒரு அமெரிக்க பத்திரிகையாளரின் தலையை துண்டித்த ஐ.எஸ்.ஐ.எஸ் தீவிரவாதிகளின் வெறிச்செயல்!!

612

அமெரிக்காவை சேர்ந்த மற்றொரு பத்திரிகையாளரின் தலையை துண்டித்த காணொளியை ஐ.எஸ்.ஐ.எஸ் தீவிரவாதிகள் வெளியிட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கடந்த 19ம் திகதி அமெரிக்க பத்திரிக்கையாளரான ஜேம்ஸ் போலே (James Foley) தலையை துண்டித்து கொலை செய்து வெளியிட்ட காணொளியில் அடுத்ததாக மற்றொரு அமெரிக்க பத்திரிக்கையாளரான ஸ்டீவன் சாட்லாஃபை (Steven Sotloff age-31) கொலை செய்யப் போவதாக ஐ.எஸ்.ஐ.எஸ் தெரிவித்திருந்தனர்.

அதேபோல் தற்போது ஸ்டீவன் சாட்லாஃபை பத்திரிக்கையாளரை கொலை செய்த காணொளியை வெளியிட்டுள்ளனர்.

அந்த காணொளியில் மண்டியிட்டு இருந்த ஸ்டீவன் கூறுகையில், ஒபாமா உங்களின் வெளியுறவுக் கொள்கை மூலம் ஈராக் விடயத்தில் தலையிடுவது அமெரிக்க மக்களின் உயிரை காக்க வேண்டும் என்பதற்காக, ஆனால் உங்கள் தலையீட்டுக்கு நான் ஏன் என் உயிரை பறிகொடுக்க வேண்டும் என்று கேட்டுள்ளார்.

ஸ்டீவன் அருகில் நின்றிருந்த ஜோன் என்ற தீவிரவாதி அங்கிலத்தில் கூறியதாவது, நான் வந்துவிட்டேன் ஒபாமா.
உங்களின் கொடூரமான வெளியுறவுக் கொள்கை, தொடர்ந்து தாக்குதல் நடத்துவது, எச்சரிக்கையையும் தாண்டி தாக்குவது ஆகியவற்றால் தான் நான் திரும்பி வந்தேன் என்று கூறிவிட்டு ஸ்டீவனின் தலையை துண்டித்துள்ளார்.

மேலும் இதே தீவிரவாதி தான் ஜேம்ஸ் போலேயின் தலையையும் துண்டித்தான் என்பது குறிப்பிடத்தக்கது.

T T1 T2 T3