மூன்று கால்களுடன் ஒட்டிப்பிறந்த வினோத சகோதரர்கள்!!

395

பிரேசில் நாட்டில் மூன்று கால்களுடன் ஒட்டிப்பிறந்த இரட்டை சகோதரர்களை அறுவை சிகிச்சை மூலம் பிரிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

பிரேசிலின் பஹியா மாநிலத்தை சேர்ந்த எலெய்ன்-ரோச்சா தம்பதியினருக்கு, ஆர்துர் மற்றும் ஹெய்டர் என்ற இரட்டை சகோதரர்கள் ஒட்டி பிறந்துள்ளனர்.

இருவரில் ஆர்தூருக்கு இரு சிறுநீரகங்களும், ஹெய்டருக்கு மூன்று கால்களும் ஒரு சிறுநீரகமும் உள்ளது. மேலும் ஒருவருக்கு மட்டும் பிறப்புறுப்பு உள்ளது.

ஐந்து வயதான இந்த இரட்டை சகோதரர்களுக்கு அறுவை சிகிச்சை செய்தால் இருவருமே தனித்து செயல்பட முடியும் என மருத்துவர்கள் கூறியுள்ளனர்.

இதுகுறித்து இவர்களது தாயார் எலெய்ன் கூறுகையில், இந்த அறுவை சிகிச்சையின் மூலம் இருவரின் வாழ்விலும் மகிழ்ச்சியான நாட்கள் தொடங்கிவிடும் என நம்புகிறேன் என்றும் இது எங்கள் ஒட்டுமொத்த குடும்பத்தின் முடிவு எனவும் தெரிவித்துள்ளார்.

B3 B1 B2