தாத்தாவுடன் வயலுக்குச் சென்ற சிறுவனுக்கு நேர்ந்த துயரம்!!

441

பொலன்னறுவை மனம்பிட்டிய, மலியதேவபுர பகுதியில் தனது தாத்தாவுடன் வயலுக்குச் சென்ற 15 வயது சிறுவன் உழவு இயந்திரம் கவிழ்ந்து உயிரிழந்துள்ளார்.

விபத்தில் காயமடைந்த தாத்தா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.

நேற்று (14.11.2025) இரவு 7.30 அளவில் சிறுவன் தனது தாத்தாவுடன் பயணித்த உழவு இயந்திரம் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.

மனம்பிட்டிய பொலிஸார் சம்பவம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.