கொழும்பில் இளம் தம்பதியினர் அதிரடியாக கைது : சிக்கிய கோடிக்கணக்கான பணம்!!

490

கொழும்பு – மொரட்டுமுல்ல பொலிஸ் பிரிவின் கட்டுபெத்த பகுதியில் 25 கிராம் ஐஸ் போதைப்பொருளுடன் திருமணமான தம்பதியினர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இன்று (17) போதைப்பொருள் கடத்துவதாக கிடைத்த இரகசிய தகவலின் பேரில், முச்சக்கர வண்டியின் சாரதியான கணவரை 15 கிராம் ஐஸ் போதைப்பொருளுடன் பொலிஸார் கைது செய்துள்ளனர்.

இதனையடுத்து சந்தேகநபரிடம் நடத்தப்பட்ட விசாரணையில் அகுலானா பகுதியில் உள்ள அவரது வீட்டில் சோதனை நடத்தியபோது, ​​சந்தேகநபரின் மனைவி மேலும் 10 கிராம் ஐஸ் போதைப்பொருளுடன் கைது செய்யப்பட்டுள்ளார்.

மொரட்டுவையில் உள்ள அங்குலானா புகையிரத நிலைய சாலை பகுதியைச் சேர்ந்த 31 மற்றும் 21 வயதுடைய தம்பதியினர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இருவரும் நீண்ட காலமாக இந்த மோசடியில் ஈடுபட்டு வருவதுடன், இதன் மூலம் கோடிக்கணக்கான பணத்தினை சம்பாதித்துள்ளனர். இதற்கமைய,சந்தேகநபர்கள் மொரட்டுவை நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைபடுத்தப்பட உள்ளனர்.

மேலும் அவர்கள் யாரிடமிருந்து போதைப்பொருள் பெற்றார்கள், மோசடியில் இருந்து அவர்கள் சம்பாதித்த பணம் மற்றும் அவர்களின் கணக்கு விவரங்கள் குறித்து இருவரையும் தடுத்து வைத்து விசாரிக்க பொலிஸார் அனுமதி கோரியுள்ளனர்.