
சில தினங்களுக்கு முன்பு 108 அம்புலன்ஸ் சேவை தொலைபேசி எண்ணுக்கு மர்ம நபர் ஒருவர் போன் பேசினார். அப்போது அவர் திருவான்மியூரில் உள்ள நடிகர் அஜித் வீட்டில் வெடிகுண்டு வைக்கப்பட்டு உள்ளது. அது வெடிக்கும் என கூறிவிட்டு போனை துண்டித்துவிட்டார்.
தகவல் அறிந்த அடையாறு பொலிசார் மோப்ப நாய் மற்றும் வெடிகுண்டு நிபுணர்களுடன் நடிகர் அஜித் வீட்டுக்கு சென்று சோதனையிட்டனர். சுமார் ஒன்றரை மணி நேரம் சோதனைக்கு பின்னர் வெடிகுண்டு எதுவும் இல்லை என்று தெரியவந்தது.
இதுபற்றி திருவான்மியூர் பொலிசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். மர்ம நபர் பேசிய தொலைபேசி எண்ணை வைத்தும் விசார்த்து வந்தனர்.
இந்நிலையில், அஜித் வீட்டுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்த அந்த மர்ம நபரை பொலிசார் தற்போது கைது செய்திருப்பதாக தகவல் வெளிவந்துள்ளது. அவர் யார், எதற்காக இந்த வெடிகுண்டு மிரட்டல் விடுத்தார் என்பது குறித்து அவரிடம் பொலிசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருவதாக கூறப்படுகிறது.





