தென்னிலங்கையில் தம்பதி சுட்டுக்கொலை : விசாரணையில் வெளிவந்த தகவல்!!

214

தங்காலை, உணாகூருவ பகுதியில் திருமணமான தம்பதியினர் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பாக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

சுட்டுக் கொல்லப்பட்ட இருவரும் வெளிநாட்டில் வசிக்கும் சக்தி வாய்ந்த போதைப்பொருள் கடத்தல்காரரான உணாகூருவே ஷாந்த என்பவரின் நெருங்கிய உறவினர்கள் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

மீட்டியாகொட – கிரலகஹவெல பகுதியில் பெண் சுட்டுக் கொல்லப்பட்ட 24 மணி நேரத்திற்குள் இந்த துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளது. தங்காலை, உணாகூருவ பகுதியில் உள்ள ஒரு கடையில் நேற்று மதியம் துப்பாக்கிச் சூட்டு சம்பவம் இடம்பெற்றுள்ளது.

குறித்த கடையை இருவரும் நடத்தி வந்தனர், மேலும் அடையாளம் தெரியாத நபர் ஒருவர் துப்பாக்கிச் சூடு நடத்திவிட்டு தப்பி சென்றுள்ளார். துப்பாக்கிச் சூடு தாக்குதலில் உயிரிழந்த தம்பதியினர் 68 மற்றும் 58 வயதுடையவர்கள் என அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

இருவரும் உணாகூருவே ஷாந்தவின் மாமா மற்றும் அத்தை என்று பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

துப்பாக்கிச் சூடு நடந்த இடத்திலிருந்து சுமார் இரண்டு கிலோமீட்டர் தொலைவில் கைவிடப்பட்ட நிலையில், துப்பாக்கிச் சூடு நடத்தியவர் வந்த மோட்டார் சைக்கிள் கண்டுபிடிக்கப்பட்டது.

சீனிமோதர மற்றும் தங்காலையில் மூன்று லொறிகளில் இருந்து பாதுகாப்புப் படையினரால் கைப்பற்றப்பட்ட போதைப்பொருள் சாந்தாவிற்கு சொந்தமானது என்பதும் தெரியவந்தது.

மேலும் இது தொடர்பான தகராறின் அடிப்படையில் இந்த துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டிருக்கலாம் என பொலிஸார் சந்தேகிக்கின்றனர். எனினும் துப்பாக்கிச் சூடு நடத்தியவர்கள் இதுவரை கண்டுபிடிக்கப்படவில்லை.

உனகுருவே சாந்தாவுக்கும் கரந்தெனியே சுத்தாவுக்கும் இடையான முறுகலின் அடிப்படையில் இந்த கொலைச் சம்பவம் இடம்பெற்றிருக்கலாம் என பொலிஸார் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.