காதலிக்க மறுத்த பள்ளி மாணவியை கொலை செய்த இளைஞன்!!

13

ராமேஸ்வரத்தில் காதலிக்க மறுத்த 12ஆம் வகுப்பு மாணவியை இளைஞர் ஒருவர் கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரம் அடுத்த சேராங்கோட்டை பகுதியைச் சேர்ந்தவர் மாரியப்பன்.

இவருக்கு இரண்டு மகள்கள் உள்ள நிலையில் மூத்த மகள் ஷாலினி ராமேஸ்வரம் பெண்கள் அரசு மேல்நிலைப்பள்ளியில் 12ஆம் வகுப்பு படித்து வருகிறார்.

இந்நிலையில், அதே பகுதியை சேர்ந்த முனியராஜ்(21) என்ற இளைஞர் மாணவி ஷாலினியை காதலிக்குமாறு கடந்த சில நாட்களாக வற்புறுத்தி வந்துள்ளார்.

இதுகுறித்து, அம்மாணவி தந்தையிடம் கூறிய நிலையில் முனியராஜன் வீட்டிற்கு சென்ற மாரியப்பன் இளைஞரை கண்டித்துள்ளார்.

ஆனால், மாணவி காதலிக்க மறுத்ததால் ஆத்திரம் அடைந்த இளைஞர் முனியராஜ் பள்ளி சென்ற மாணவியை கத்தியால் குத்தியதில் அம்மாணவி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

இதையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த பொலிஸார் மாணவியின் உடலை கைப்பற்றி அரசு மருத்துவமனையில் அனுப்பி வைத்தனர்.

மேலும் மாணவியை கத்தியால் குத்திய இளைஞர் முனியராஜை கைது செய்து பொலிஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.