
ராமநாதபுரம் மாவட்டம் ராமேசுவரத்தைச் சேர்ந்த 12ம் வகுப்பு மாணவி ஷாலினி (17) இன்று காலை வழக்கம் போல பள்ளிக்கு சென்றுக் கொண்டிருந்த போது, அதே பகுதியில் வசிக்கும் முனிராஜ் என்பவர், பள்ளி மாணவியை தொடர்ந்து பின் சென்று, காதலிக்க வற்புறுத்தியதாக கூறப்படுகிறது.
பல நாட்களாக மாணவியைப் பின் சென்று காதலிக்க வலியுறுத்தி வந்த முனிராஜின் காதலை மாணவி ஷாலினி ஏற்காத நிலையில், இன்று காலை முனிராஜ் குடி போதையில் மாணவியை மறைத்து வைத்திருந்த கத்தியால் கழுத்தில் குத்தி விட்டு அங்கிருந்து தப்பி ஓடியதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
கத்திகுத்துப் பட்டதில் சம்பவ இடத்திலேயே துடிதுடித்து ரத்த வெள்ளத்தில் மயங்கி விழுந்த மாணவியை, அருகிலிருந்தோர் ராமேசுவரம் அரசு மருத்துவமனையில் சேர்த்து முயற்சித்தனர். ஆனால் மருத்துவர்கள் பரிசோதனை செய்த போது மாணவி ஏற்கெனவே உயிரிழந்து விட்டதாக தெரிவித்தனர்.
இது தொடர்பான சம்பவத்தை அறிந்த காவல் துறையினர் விரைந்து சென்று, முனிராஜை கைது செய்து, மேற்கொண்டு விசாரணை நடத்தி வருகின்றனர்.





