வவுனியா செட்டிகுளம் துட்டுவாகையில் 43 வறிய மாணவர்களுக்கு கற்றல் உபகரணம் வழங்கிய இளந்தளிர் கல்வி அறகட்டளை!!

1041

செட்டிகுளம் துட்டுவாகையில் தந்தையை இழந்த 15 மாணவர்களுக்கும், மிகவும் வறிய 28 மாணவர்களுக்குமாக மொத்தம் 43 மாணவர்களுக்கு துட்டுவாகை கிராம அபிவிருத்தி சங்கம் ,தமிழ் விருட்சம் சமுக ஆர்வலர்கள் அமைப்பிடம் விடுத்த வேண்டுகோளுக்கு அமைவாக இளந்தளிர் கல்வி அறகட்டளை வழங்கிய ஒரு தொகுதி கற்றல் உபகரணங்களில் 43 மாணவர்களுக்கான கற்றல் உபகரணங்கள் 28.08.2014 காலை 10 மணிக்கு துட்டுவாகை பொது நோக்கு மண்டபத்தில் வைத்து வழங்கி வைக்க பட்டது .

இந்த நிகழ்வில் தமிழ் விருட்சம் சமுக ஆர்வலர்கள் அமைப்பின் சந்திரகுமார் (கண்ணன் ), துட்டுவாகை கிராம அபிவிருத்தி சங்க தலைவர் ஜோன், துட்டுவாகை, இளந்தளிர் விளையாட்டு கழக செயலாளர் பெனட், உறுப்பினர் வசந்தன் , துட்டுவாகை மீள் எழுச்சி திட்ட தலைவி சந்திரிக்கா ,பொருளாளர் யோகேஸ்வரி, துட்டுவாகை மகளிர் அமைப்பின் குறிஞ்சிமலர் உட்பட பெற்றோர்கள் பலரும் கலந்து கொண்டனர்.

DSCN1349 DSCN1352 DSCN1366 DSCN1367 DSCN1370 DSCN1371 DSCN1373 DSCN1386 DSCN1388 DSCN1394 DSCN1395