நடிகை அதிதி முகர்ஜி விபத்தில் உயிரிழப்பு!!

19

பிரபல மராத்தி மற்றும் இந்தி நாடகங்களிலும், திரைப்படங்களிலும் நடித்து வந்த நடிகை அதிதி முகர்ஜி, விபத்தில் உயிரிழந்தார்.

மேடை நாடகங்களில் இருந்து தனது நடிப்பு பயணத்தை தொடங்கிய நடிகை அதிதி முகர்ஜி, குறுகிய காலத்தில் தனது திறமையால் நாடகத்தில் இருந்து திரைத்துறையில் அறிமுகமானார்.

தேர்ந்தெடுத்த கதாபாத்திரங்களாலும், இயல்பான நடிப்பாலும் குறுகிய காலத்திலேயே ரசிகர்களிடையே வரவேற்பைப் பெற்றிருந்தார்.

திறமையுடனும் நாடக மேடை அனுபவங்களில் இருந்து திரைத்துறைக்கு வந்திருந்த அதிதி, தியேட்டர் நிறுவனத்தின் சிறந்த மாணவியாகவும் இருந்தார்.

இந்நிலையில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொள்வதற்காக அவர் நொய்டா–கிரேட்டர் நொய்டா விரைவு சாலையில் காரில் பயணித்துக் கொண்டிருந்த போது, இவர்களது கார் விபத்திற்குள்ளானது.

உடனடியாக அதிதி முகர்ஜியை மீட்டு, சாரதா மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கிருந்து தீவிர சிகிச்சைக்காக கிரேட்டர் நொய்டாவுக்கு அழைத்து செல்லப்பட்டார்.

ஆனால், தலையில் படுகாயமடைந்த நிலையில் இரத்தம் பெரியளவில் இழப்பு ஏற்பட்டுள்ளது. மருத்துவர்கள் போராடியும் நடிகை அதிதி முகர்ஜி சிகிச்சைப் பலனின்றி காலமானார்.

நாடக இயக்குநர் அரவிந்த் கவுர் நடிகை அதிதி முகர்ஜியின் இறப்பை துக்கத்துடன் உறுதி செய்துள்ளார். இது குறித்து அவர் கூறுகையில், “அதிதி ஒரு மிகுந்த திறமையுடனும், உற்சாகமுடனும் நடிக்கக்கூடிய நடிகை.

அவர் விரைவில் புகழ் வெளிச்சத்திற்கு வந்துக் கொண்டிருக்கிறார் என்று நம்பினோம்; ஆனால் இவ்வளவு சீக்கிரத்தில் நம்மை விட்டு அகன்றுள்ளார்” என்று பதிவேற்றியுள்ளார்.