வவுனியாவில் பாடசாலை அனுமதிக்கு பணம் பெற்ற அதிபருக்கு எதிராக நடவடிக்கை!!

613

Money

பாடசாலையில் மாணர் ஒருவரை இணைப்பதற்கு பணம் வாங்கியதாக குற்றம்சாட்டப்பட்டுள்ள அதிபர், உபஅதிபர் ஆகியோருக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

வவுனியா நகருக்கு அண்மையில் உள்ள பிரபல கல்லூரி ஒன்றில் மாணவன் ஒருவருக்கு அனுமதி பெறச் சென்ற போது குறித்த மாணவனின் பெற்றோரிடம் பணம் அறவிடப்பட்டதாக அப் பெற்றோரால் பாடசாலை அதிபர், உபஅதிபர் ஆகியோருக்கு எதிராக வடமாகாண கல்வித் திணைக்களத்தில் முறைப்பாடு செய்யப்பட்டிருந்தது.

இது தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்ட வடமாகாண கல்வித் திணைக்களம், குறித்த பாடசாலை அதிபரை நேற்றைய தினம் முதல் வவுனியா தெற்கு வலயக்கல்வித் திணைக்களத்திற்கு இணைத்துள்ளதுடன் உப அதிபரை வேறு பாடசாலைக்கு இடமாற்றமும் செய்துள்ளதாக தெரியவருகிறது.