ஆடம்பர வீட்டினால் சிக்கிய பெண் – நீதிமன்றம் பிறப்பித்துள்ள உத்தரவு!!

6

மொரட்டுவ பகுதியில் வசிக்கும் நபர் ஒருவர் சட்டவிரோத பணத்தில் வீடு மற்றும் சொத்துக்களை கொள்வனவு செய்தமை குறித்து மத்திய குற்றப் புலனாய்வுப் பணியகத்தின் சட்டவிரோத சொத்து விசாரணைப் பிரிவு விசாரணைகளை ஆரம்பித்துள்ளது.

அதற்கமைய, நடத்தப்பட்ட விசாரணையில், குறித்த நபர் போதைப்பொருள் கடத்தல் மூலம் சொத்துக்களைப் பெற்றுள்ளதாக தெரியவந்துள்ளது.

அவ்வாறு சம்பாதித்த பணத்தில் அந்த நபர் தனது மனைவியின் பெயரில் பாணந்துறை பகுதியில் 10 பேர்ச்சஸ் நிலத்தை வாங்கி அதில் இரண்டு மாடி வீடு கட்டி வருவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

சட்டவிரோதமாகப் பெற்ற வீடு மற்றும் சொத்துக்களை வாங்கிப் பயன்படுத்தியதற்காக குறித்த நபரின் மனைவி கடந்த 21 ஆம் திகதி மத்திய குற்றப் புலனாய்வுப் பணியகத்தின் சட்டவிரோத சொத்து விசாரணைப் பிரிவால் கைது செய்யப்பட்டார்.

சந்தேக நபர் மறுநாள் மொரட்டுவ நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்ட நிலையில் எதிர்வரும் முதல் திகதி வரை விளக்கமறியலில் வைக்க நீதவான் உத்தரவிட்டுள்ளார்.